அரசியலில் ஆர்வம் இல்லை தமிழ் நடிகர் தெரிவிப்பு

பாரதீய ஜனதாக் கட்சியில் அஜீத் ரசிகர்கள் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தனக்கு அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை தான் விரும்பவில்லையென்றும் அஜீத் கூறியுள்ளார் . தன் நிலையை விளக்கி அஜீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.மேலும் தனக்கும் அரசியலுக்கும் ஆன தொடர்பு ஜனநாயக கடமையான வாக்கு போடுதல் மட்டுமே என்றும் அறிவித்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Comments