Dangerous game “ 10 year challenge “

ஆபத்தான விளையாட்டு...👇👇👇

பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீங்கள் இருந்தால் #10YearChallenge எவ்வளவு வைரலாக பரவியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரோ தற்போது மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கலாம். பிரச்சனை இல்லை.

முதலில் இந்த போக்கில் எந்த தீங்கும் இல்லாத மாதிரிதான் இருந்தது. ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும்.

ஏதேனும் தொழில் யோசனையின் ஒரு பகுதியா இது? ஒரு தரவு வங்கி தயாரிப்பதற்காக, உங்கள் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வேண்டுமென்றே கேட்கிறார்களா? இதற்கு பின் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? இதில் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டுமா?

பேஸ்புக் கூறுவது என்ன?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடுவதற்கு முன்னால், இதுகுறித்து பேஸ்புக் என்ன கூறியுள்ளது என்று பார்க்கலாம். "இது பயன்பாட்டாளர் ஒருவரால் தொடங்கப்பட்ட மீம். தானாகவே வைரலாகி உள்ளது. இந்த ட்ரென்டை பேஸ்புக் தொடங்கவில்லை" என்கிறது.

"ஏற்கனவே இருக்கும் புகைப்படத்தை வைத்துதான் மீம்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக் இதனை எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் பயனாளர்கள், முகம் அடையாளப்படுத்தும் தன்மை என்று அறியப்படும் பேஷியல் ரெகக்னிஷன் வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

பேஸ்புக் தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், #10Year_Challenge குறித்து மட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த மாதிரியான விளையாட்டுகள் அல்லது மீம்கள் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன. இவற்றின் திட்டம் தரவுகளை சேகரிப்பது.

இந்த சவால் ஒரு டைம் பாஸோ அல்லது கேளிக்கையோ இல்லை, இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.

Comments