அமெரிக்காவில் துருவ சூழல் (Polar Vortex ) என அழைக்கப்படும் வரலாறு காணாத கடும் குளிர்
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகத் துருவச் சுழல் (Polar Vortex) என்று அறியப் படும் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் குளிர் அங்கு மேற்குப் பகுதி நகரங்கள் உட்பட பல இடங்களில் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதுவரை கடுங்குளிருக்கு 12 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதுடன் அங்கு சிகாக்கோ ஆறு பனிக்கட்டியாக உறைந்துள்ளது.
கடும் குளிர் மற்றும் பனி காரணமாக அங்கு இதுவரை சுமார் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளது. பல இடங்களில் பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. அண்டார்டிக்காவின் பல பகுதிகளை விட சிகாக்கோவில் குளிர் அதிகம் என்றும் ஒப்பிடப் பட்டுள்ளது. இந்நகரில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என மேயர் வலியுறுத்தியுள்ளார். மேற்கு திசை தட்ப வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸ் வரை செல்லாம் என அமெரிக்க தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.



Comments
Post a Comment