மறுமணம் மகிழ்ச்சியாக செய்யவேண்டிய ஒன்று அனைவருக்கும் வாழ்க்கை உண்டு

மறுமணம் என்றாலே சமூகத்தின் ஏளனங்களுக்கு அச்சப்பட்டு இரகசியமாகவோ அல்லது எளிமையாகவோ செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணம்தான் இன்னும் கொண்டாட்டத்தோடு செய்யவேண்டும்.

தாலி கட்டிவிட்டாலே 'அதுதான் வாழ்க்கை... அனைத்தையும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழவேண்டும்...கல்லானாலும் கணவன்...புல்லானாலும் புருசன் என்றுச் சொல்லிக்கொண்டு கணவனையோ... கணவன் வீட்டார் என்ன நெருக்கடிகளை கொடுத்தாலும் சகித்துக்கொண்டு வாழவேண்டும்' என்று நரக வாழ்க்கை வாழ்வதைவிட பிரிந்து புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

அதனால், இதுபோன்ற மறுமணங்களை கொண்டாடினால்தான் அவளைப் பார்த்து கனவுகளை புதைத்துவிட்டு குழந்தைக்காக வாழும் பெண்கள் மறுமணம் செய்துகொள்வார்கள். மறுமணம் தவறில்லை என்று நினைப்பார்கள். தன்னைப் பற்றியும் யோசிப்பார்கள்.

மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் செளந்தர்யா ரஜினிகாந்த்

Comments