பிக்பாஸ் சென்ராயனுக்கு ஆண் குழந்தை.


பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் சென்ராயன் மூடர் கூடம் படத்தின் மூலம் கவனம் பெற்றார்.பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சென்றாயன் தனது மனைவி கர்ப்பாமாக இருப்பதை அறிந்து துள்ளி குதித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று அவருடைய மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முகத்தை பார்த்து சென்றாயன் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Comments