எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி நாம் தமிழர் கட்சி அறிவிப்பு .

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி. இதன் ஒருபகுதியாக, `தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள்' என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன் தொடர்ச்சியாக எந்தெந்த தொகுதிகளில் ஆண்களும் எந்தெந்த தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுவார்கள் என்ற பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதில் ஆண்களும் பெண்களும் தலா 11 மற்றும் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்

Comments