உன்னை வாழ்த்தவில்லை என்றால் நான் தமிழனே அல்ல

தங்க மகள் கோமதி_மாரிமுத்து மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி.

'நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக என் தந்தை மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட சாப்பிட்டிருக்கிறார். அப்பா, உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்'. ‘தங்க மகள்’ கோமதி மாரிமுத்து நெகிழ்ச்சி.

`பயிற்சிக்கு அடித்தளமே மைதானம்தான். அப்படியான மைதானமே இல்லாமல் தடகளத்தில் தங்கம் வெல்வதில் உள்ள சிரமத்தை நம்மால் உணர முடியும். மிகப்பெரிய உழைப்பு ஒன்று அதற்குத் தேவை. அந்த உழைப்பைக்கொட்டி, சாதித்திருக்கிறார், தமிழகத்தின் தங்க மகள் கோமதி மாரிமுத்து'.

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு விமான நிலையத்தில் பாரிய வரவேற்பு, கெளரவம் அளிக்கப்பட்டது.

Comments