முகநூல் நிறுவனத்தின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து ஒன்றுபட்டு குரலெழுப்புவோம்!


முகநூல் நிறுவனத்தின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து ஒன்றுபட்டு குரலெழுப்புவோம்!

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடைய படத்தை முகநூலில் பதிவிட்டால் பதிவிட்டவரின் பதிவை நீக்குவது, முகநூல் கணக்குகளை முடக்குவது என்ற முறையில் முகநூல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

உலக நாடுகளும், ஐநா மன்றமும் ஏற்றுக் கொண்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய தமிழீழத் தேசியத் தலைவன் பிரபாகரன் படத்தை பதிவிடுவது தர அளவுகோல் என்ற பெயரில் குற்றம் என முகநூல் நிறுவனம் கொள்கை வகுத்திருப்பது போல செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.

அதுமட்டுமல்ல இணைய சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஒரு விடுதலைப் போராளியின் படத்தைப் பதிவிடுவதை நீக்குவது என்பது இந்திய அரசின் தமிழினப் பகைக் கொள்கைக்கு முகநூல் நிறுவனம் ஒத்தூதுவது போல செயல்படுவதை ஏற்க முடியாது.

உலகெங்கிலும் வாழும் பத்து கோடி தமிழர்களின் உழைப்பை மூலதனமாக சுரண்டி இலாபம் கொழிக்கும் முகநூல் நிறுவனத்திற்கு தக்க பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

இதனைச் செயல்படுத்தும் வகையில் நாள், நேரம் குறித்து ஒரே நேரத்தில் பல கோடிக் கணக்கான பிரபாகரன் படத்தை பதிவிட்டு முகநூல் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு சனநாயக இயக்கத்தை இதே முகநூலிலே நடத்த ஆவண செய்வோம்.

#Prabhakaran_Is_Our_community_Standards

நன்றி: குமரன் — with தமிழ் பிரியா.

Comments