அரசிற்கு உதவ புலிகள் தயார்!
அரசிற்கு உதவ புலிகள் தயார்!
"இலங்கை எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கான உதவிகள் குறித்து இலங்கை அரசாங்கம் என்னிடம் கோரும் பட்சத்தில், அதனை உரிய வகையில் செய்யத் தயார்.” - முன்னாள் போராளி துளசி
இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி பி.பி.சி தமிழுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment