எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன் காலமானார்.

நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா, திரைப்பட நடிகர், நாடக இயக்குநர் என பன்முகத்திறன் பெற்ற கிரேசி மோகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பன்முகத் தன்மை வாய்ந்த படைப்பாளியான கிரேசி மோகன் அவர்களின் உடலுக்கு திரையுலகினரும், அவருடைய திரையுலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Comments