நல்லுாரில் இந்த வருடம் தேர்த்திருவிழா வெளிவீதியில் நடைபெறாது!!!


ஆலய நிர்வாகத்தினர் தகவல்!!!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளி வீதி உலா வராவது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வெளிவீதியில் தேர் உலா வராத போதிலும், ஆலயத்தில் உள்வீதியில் சிறிய தேர் உலா வரும் என கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments