ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கைகள்! #Srilanka

மிரண்டு போகும் நாட்டு மக்கள்!!

***தனது பாதுகாப்பு தொடரணியில் ஆட்களை குறைத்துள்ளதுடன், ஜனாதிபதி வாகன தொடரணி பயணிக்கும் போது வீதிகளை மூடுவதற்கும் தடை!

#கோத்தபாயராஜபக்ச ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்பு அறிவித்துள்ள முக்கியமான செயல்திட்டங்களின் தொகுப்பு:

1 - ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதும் "அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் புகைப்படங்களை காட்சி படுத்துவதை தடை செய்ததுடன் அதற்க்கு பதிலாக அரச இலச்சினையே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கினார்.
அரச அலுவலகங்களில் அரச தலைவர்களின் படங்களை காட்சி படுத்துவதால் மக்களுக்கு அரசின் மீதான ஈடுபாடு, நம்பிக்கை மற்றும் தேச எண்ணக்கரு போன்றன ஆளுக்கு ஆள் மாறுபட வழிசமைக்கிறது. அரசு என்பது அனைத்து மக்களும் ஒரே எண்ணக்கருவை தோற்றிவிக்கும் நிர்வாகமாக இருக்க வேண்டும் அதனை தன்னுடைய அரசு மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

2 - இலங்கையில் நிலவும் போதைப் பொருள் பாதாள உலகக்கும்பலை அகற்றி நாட்டைச் சுற்றம் செய்வதற்கு முப்படையினரிடம் பொறுப்பை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற மாவட்டங்கள் போதைப்பொருள் பாவனையில் அதிகளவு பாதிக்கப்படுவதாகவும் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவருவதும் வேதனை தரும் விடயங்களாக காணப்படுவதால் அதிரடியாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முப்படையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் .அது மட்டும் இன்றி கடந்த காலத்தில் பாதாள உலக கோஷ்டியினரால் கிழமைக்கு ஓரிரு துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகி வந்துள்ளமையும் கிழமைக்கு ஒருவர் துப்பாக்கிக்கு இலக்காகி வந்துள்ளதை நிறுத்தவும் முப்படையை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3- மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின்
தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து விழாக்களும்
தலைமை ஏற்பவரின் சொந்தச் செலவிலேயே நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகள் தலைமையேற்கும் நிகழ்வுகளுக்கு அரச பணம் அல்லது அவர்களின் அமைச்சு பணத்தை பயன்படுத்த முடியுமான அம்சம் ஒன்று காணப்பட்டது. இதனால் ஆண்டுக்கு கோடிக்கணக்கான பணம் வீணாக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலத்தில் மிக பிரபல்யமான ஒரு அமைச்சர் தன்னுடைய விழாக்களுக்கு மாத்திரம் 300கோடி செலவு செய்திருந்தமை நினைவிருக்கும். இவ்வாறு மக்கள் பணம் செலவழிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

4 - ஓரிரு தினங்களுக்குள் கொழும்பு உட்பட மேல்மாகாணம் முழுவதும் சுத்தம் செய்யப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை தேர்தல்களை தள்ளிப்போட்டதன் காரணமாக கேட்பாரற்ற நிர்வாகம் ஒன்று நடைபெற்று வந்தது, வருகிறது. இதனால் தலைநகர் உட்பட மேல்மாகாணம் மிகவும் மாசுடன் காணப்படுகிறது. சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கும் மிகவும் பாதிப்பை ஏட்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக மாற்றியமைக்கும் பொருட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

#GotabhayaRajapaksa #GR #Eelam #Eelamtamils #Jaffna #SL #LKA #LK #worldwidetamils #worldwidetamilsworld

Comments