முக்கிய அறிவிப்பு:


      நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பயனின்றி இன்று (19-09-2020) மாலை 06 மணியளவில் உயிரிழந்தார் என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஐயாவின் மறைவையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்படுகிறது. 


 மாவட்ட/தொகுதி அலுவலகங்களில் துயரம் கடைபிடிக்கும் விதமாக கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென்றும், தனிநபர் இடைவெளியோடும் உரிய பாதுகாப்போடும் நாம் தமிழர் உறவுகள் ஐயாவின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி


Comments