விமானி எல்லாம் தானா விமானத்தை ஓட்டுவதில்லை!அது தான் உண்மை!

ரொம்ப பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.அதெப்படி பைலட் சரியா பாதையை கண்டு பிடித்து இன்னொரு நாட்டுக்கு விமானத்தை செலுத்துகிறார் என்று! விமானி எல்லாம் தானா விமானத்தை ஓட்டுவதில்லை!அது தான் உண்மை! அதாவது நாம ஒவ்வொரு ஊருக்கும் செல்ல சாலை,இரயில் தண்டவாளம் இருப்பது போல வானத்தில் நிரந்தரமான விமான பாதை உண்டு! அந்த பாதைக்கு பெயர் ஏர்வேஸ்(Air ways) இந்த பாதை ஒவ்வொரு காலகட்டத்தில் வானியல் சூழ்நிலை அனுபவப்படி தீர்மானிக்கப்பட்டவை ஆகும். விமானம் ஒரு நாட்டுக்கு கிளம்பும் முன்,பக்காவா விமான பாதை,எந்தந்த இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என மேப் கொடுத்து விடுவார்கள். விமானி விமானத்தில் ஏறியவுடன் காக்பிட்டில் உள்ள சிஸ்டத்தில் விமான பாதை,செல்லும் நாட்டுக்கு இடையில் உள்ள எந்தெந்த நாடுகளின் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அப்லோடு செய்துவிடுவார். விமான Gps கருவி எல்லாவற்றையும் உள் வாங்கி கொண்டு அந்த மேப்பின் வழியாக பயணிக்கும்.நாம கார்ல போகும் போது கூகுள் மேப் வழிகாட்டுவது போல் அதுவும் வழி காட்டும். விமானி, விமான சிஸ்டத்தில் செல்லும் வழியை பதிவேற்றி விட்டதால்,நீண்ட தூர பயணத்தில் ஆட்டோ மோடில் போட்டுவிட்டு விமானி தூங்கி ஓய்வெடுக்கலாம். சரி இப்ப Gps,system எல்லாம் வந்துவிட்டது அப்ப அந்த காலத்துல எப்படி விமானம் சரியா சென்றது என நீங்க கேட்கலாம். ரேடாரின் ரேடியோ அலைகளை வைத்துதான் விமானம் அந்த காலத்தில் சென்றது. எது எப்படியோ ஆனால் இந்த காலத்து பைலட்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Comments