"நான் ஒரு பணக்கார குடும்பத்துப் பிள்ளை அல்ல"
"நான் ஒரு பணக்கார குடும்பத்துப் பிள்ளை அல்ல"
நான் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் அல்ல,எனது தந்தையும் ஒரு செல்வந்தர் அல்ல,மூன்று முறை பல்கலைக்கழக நுழைவிற்கு முயற்சி செய்தும் உள்ளே நுழைய முடியவில்லை.
நான் ஹார்வர்ட் இற்கு 10 முறை விண்ணப்பித்தேன் , அனைத்தும் தோல்வியே ! அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை.
சுமார் 30 தடவைகள் தொழிலுக்கு விண்ணப்பித்தேன் ! உனக்கு இங்கு தொழில் செய்வதற்கான எந்தத் திறமைகளும் இல்லை என்று என்னை சேர்த்துக் கொள்ள வில்லை.
"Internet" என்ற வார்த்தைக்கு சரியாக அர்த்தமே தெரியாத கலத்தில் எனது சிந்தனைகளை முன்வைத்த போது பலரும் சிரித்தார்கள் , கேளிக்கைகள் செய்தார்கள்.யாருமே எனது கருத்தை செவிசாய்க்கக் கூட தயாராக இருக்க வில்லை.
"அவன் என்னமோ வித்தியாசமாக செய்யப் போரானாம் " பாப்பொமே என்னதான் செய்வான் என்று ! ( இப்படித் தான் என்னை சுற்றியுள்ள பலரும் சொன்னார்கள்)
💥உனக்கு இந்தத் துறையில் என்னா தான் தெரியும் ?
💥அனுபவம் இருக்கா? இல்லை காசி தான் இருக்கா ?
💥உன்னால் இதுல ஒண்டும் செய்ய ஏளாது!
என்றாலும் நான் என் மீது இன்னும் நம்பிக்கை வைத்து என் இலக்கில் குறியாக இருந்தேன்.வேறு விதமான வழிகளை தேட ஆரம்பித்தேன்,
முதலீட்டாளர்கள் 30-40 இடைப்பட்டவர்களை சந்தித்து எனது Business Idea வை முன்வைத்த போது அவர்கள் அனைவரது பதிலும் "No" It's not Work என்றே இருந்தது.
#Alibaba என்று தாங்கள் முன்வைக்கும் இந்த Idea வானது எந்தப் பிரயோசனமும் அற்றது , இந்தக் காலகட்டத்திற்கு இது பொருந்தாது என்பதையே அவர்கள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
ஆனால் நான் எனது கனவை விட்டு விலகவில்லை , வழிமுறைகளில் மாற்றங்களை செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்தேன்.
பலரது வரவேற்புக்களும் வரத் தொடங்கியது, அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கினோம் , ஆனாலும் 3 ஆண்டுகள் கடந்தும் எமது வருமானம் 1 $ ரை தாண்ட வில்லை.
அதன் பின்னர் இன்னும் பலரையும் இணைத்துக் கொண்டு புதிய உக்திகளை மேற்கொண்டு பலராலும் பேசப்படக்கூடிய அளவிற்கு ஒரு இடத்தை அமைத்துக் கொண்டோம்.
இப்படியாக கடும் தோல்விகளுக்கும் , போராட்டங்களுக்கும் அப்பால் 16 ஆண்டுகள் கடந்த பின்னரே எமது கம்பெனியை பெரிய மட்டத்தில் அறிமுகம் செய்தோம்.
எமது வெற்றிப் பயணத்தை அவதானித்த பின்னர் - எனது இந்த Business Idea சரிவராது ! இதற்கு இடம் கிடைக்காது ! உங்களுக்கு என்ன தான் அனுபவம் இருக்கு என்று கேட்ட பல நிறுவனங்களும் , நான் நினைத்துக் கூட பார்க்க முடியாதிருந்து பல முதலீட்டாளர்களும் எனது Business இற்கு முதலீடு செய்ய முன்வந்தார்கள்.
( இன்று எமது கம்பெனி இருக்கும் நிலை உலகிற்கே தெரியும்.)
நான் இன்றைய இளைஞர்களுக்கு சொல்வதெல்லாம் உங்கள் கனவுகளை விட்டுக் கொடுக்கவோ மாற்றி விடவோ வேண்டாம், மாறாக வழிமுறைகளை மாற்றிப் பாருங்கள் ! இலக்கோடு பயணியுங்கள்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை மிகவும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! சந்தர்ப்பங்கள் கிடைக்க வில்லையா ! சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள்.
Comments
Post a Comment