♥சாதாரணமாகவே பெண்களுக்கு ஒருபழக்கம் உண்டு.அவர்களுக்கு ஒரு அவசரமும் இல்லை என்றாலும்கூட தன் கணவன் தன்னருகிலேயே இருக்கவேண்டும். ♥இரவு ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் பிந்தினாலும் ஓராயிரம் தடவைகள் call பண்ணுவதும். நிமிடத்துக்கு ஒருதடவை call செய்து எங்கு நிக்கிறாய் என்று கேட்பதும் பெண்களுக்கே உரிய இயல்பு. ♥அதுவும் பிரசவகாலத்தில் சொல்லத் தேவையில்லை. எத்தனையாயிரம் பட்டங்கள் பதவிகள் பெற்றிருந்தாலும் ஒரு பெண் நேசிக்கும் உயர்வான நிலை என்பது தன் தாய்மைப்பதவி தான். ஒரு பெண்ணை உற்று அவதானியுங்கள் சாதாரணமாக நாட்களை விட கர்ப்பம் தரித்தநாட்களில் மெய்மறந்து கனவுகளில் மூழ்கியபடி தான் திரிவாள். ♥நிறையப் பேர் சொல்வார்கள் கர்ப்பிணிகள் விதவிதமாக சாப்பிட விரும்புவார்கள் என்று. ஆனால் அதனைவிட அவர்கள் விரும்புவது விதம் விதமாய் கனவு காண்பதைத்தான். ♥ஒரு பெண் காதல் வயப்பட்ட காலத்தை விட கர்ப்பம் தரித்த காலத்திலேயே அதிகம் கவிதைகள் சொல்கிறாள் அதிகம் தனக்குள் பேசுகிறாள். காதலிக்கும் காலத்தில் தன் காதலனின் கற்பனை உருவத்தோடு பேசுகிறாள். கர்ப்பம்தரித்த காலத்தில் அவள் தன் காதலின் விம்பமான சிசுவோடு பேசுகிறாள். ♥ஒரு கர்ப்பிணி அதிகபட்சம் தன் கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன? தான் சுமக்கும் சிசு தன்வயிற்றில் எட்டியுதைப்பதை தன் கணவனுக்கு காட்டவேண்டும். கணவன் தன் வயிற்றில் காதை வைத்து சிசுவோடு செல்லமாய் கதைக்கவேண்டும் "டேய் அப்பாக்கு உதைஞ்சுவிடடா" என்று செல்லமாய் தன் சிசுவுக்கு சொல்லவேண்டும் என்பதைத்தான். ♥கற்பகாலத்து முத்தம் தான் ஒரு பெண்ணுக்கு மிகப்பெறுமதியானது. அவள் இவ்வளவு காலமும் எந்த அங்கத்திலும் பெற்ற எப்பேர்ப்பட்ட ஆழமான முத்தமும் கர்ப்பகாலத்தில் கணவன் வயிற்றில் தரும் முத்தத்திடம் தோற்றுப்போகும். ஏனென்றால் கணவனின் அந்த ஒற்றை முத்தம் அவனுடைய காதலிக்கும் தன் காதலின் அடையாளமான சிசுவுக்குமானது... ♥இப்படி கணவனிடம் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருக்கும் அவளின் கர்ப்பகாலத்தில் இறுதியானதும் விட்டுக்கொடுக்கமுடியாததுமான அவளின் பெரும் எதிர்பார்ப்பும் ஆசையும் எது தெரியுமா? குழந்தையை ஈன்று தன் கணவனின் கைகளில் கொடுத்து "அப்பாவ பாரு என்று சொல்லும் அந்தத் தருணம்தான். ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய சந்தோசம்...

Comments