இயக்குனர் அமீர் ' தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமில்லாத தலைவர்,
இயக்குனர் அமீர் ' தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமில்லாத தலைவர், அவரைத் தமிழகத்தின் தலைவராக முன்னிறுத்துவதோ, பின் தொடர்வதோ ஏற்புடையதல்ல' என்ற தொனியில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கும் ஒரு செவ்வியைப் பார்த்தேன்.
கோட்பாடு, தத்துவப் பின்னணியில் தலைவரது வகிபாகத்தை தமிழக அளவில் அல்ல, உலகளாவிய அளவிலேயே நம்மால் நிறுவ முடியும்.
அமீரின் ரேஞ்சுக்கு அந்தத் தர்க்கங்களை அடுக்குவது நமது தகுதிக்குத்தான் ஊறு.
எனவே ஒரு சில வரிகளில் மிக எளிமையாக ஒரு பதில்.
கியூபாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்கக் கண்டத்தில் இரு தேசங்களைச் சேர்ந்த சமோரோ மார்சல், தோமஸ் சங்கரா முறையே கறுப்பு பிடல் காஸ்ட்ரோ, கறுப்பு சேகுவேரா என்று அழைக்கப்பட்டார்கள்.
காரணம் அவர்களைத் தமது முன்னோடிகளாக வரித்து அவர்களது சித்தாந்தத்தைக் கடைப்பிடித்ததுதான்.
இது அமீருக்குத் தெரியுமா?
சரி அவர்கள் புரட்சியாளர்கள் என்று வைத்துக் கொண்டாலும் உலகளவில், இந்திய அளவில் மட்டுமல்ல தமிழகத்தில்கூட மாவோ, லெனின், மார்க்சை அடியொட்டி அல்ல அவர்கள் பெயரிலேயே உள்ள இயக்கங்கள், கட்சிகள் குறித்து அமீருக்குத் தெரியாதா?
இந்தத் தலைவர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த அடிப்படையில் பார்த்தால் சீமான் பிரபாகரன் கட்சி அல்லது பிரபாகரனிய கட்சி என்றுதான் தனது கட்சிக்குப் பெயர் வைத்திருக்க வேண்டும்.
சீமான் பிரபாகரனின் கொள்கை வழி நடக்கிறாரா? அதைப் பின்பற்றுகிறாரா? என்பதெல்லாம் வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை - தர்க்கம்.
தமிழகத்திலும் / ஈழத்திலும் உள்ள கொம்யூனிச, மார்க்சிச இயக்கங்கள் மட்டும் அதையா பின் பற்றுகின்றன? இன அழிப்பு அரசுகளுக்கு விளக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
பட வாய்ப்பு இல்லாத ஒரு இக்கட்டான சூழலில் அமீர் வயிற்றுப் பிழைப்பிற்காக கோபாலபுரத்தை நோக்கி நகர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அதற்காக விடுதலைப் போராட்டங்கள் குறித்து எதையாவது வாந்தி எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அமீருக்கு split personality என்று நினைக்கிறேன். இன்றைய தமிழக முதலமைச்சரின் பெயர் ( தமிழ்நாட்டிற்கு எந்த சம்பந்தமுமில்லாத ) ஒரு சோவியத் புரட்சியாளரின் பாதிப்பில் வைக்கப்பட்டதென்பதை அவரே ஒரு இடத்தில் பேசியதாக நினைவு. (copy)
Comments
Post a Comment