எமக்கில்லை தீபாவளி

எமக்கில்லை தீபாவளி வெளிநாட்டில் நாங்கள்... விடியும் விடியும் என்று-நாம் தூங்காத இரவுகள் அதிகம்! துரோகிகளின் குரச்சளிலும் எதிரிகளின் இரைச்சலிலும்-எப்படி எம்மால் தூங்க முடியும்? நிரந்தர முகவரி இல்லை! நின்மதிகூட இல்லை! படுக்க தாய்மண்ணில்லை பாலூட்டும் நிலவுமில்லை! அலைந்த இரவுகள் அதிகம்-இன்று தேசத்தை நினைத்து அழுத இரவுகள் அதனிலும் அதிகம்! படுக்கை அறையில் படமாய்த் தெய்வங்கள் இருக்கிறதோ இல்லையோ! எங்கள் தேசம் இருக்கிறது! படுத்துக்கொண்டே பார்க்கிறோம்! பார்த்துக் கொண்டே தூங்கிறோம்! வேளைகளில் தேசத்தை நினைக்கையில் நெஞ்ஞ்சம் கனக்கிறது! மக்களை நினைக்கையில் கண்ணீர் நனைக்கிறது! பாசமிருந்தும் பகிந்துகொள்ள நேரமில்லாத தந்தைகள் அதிகம்! அன்பிருந்தும் அள்ளியணைக்க அன்னையில்லாத பிள்ளைகள் அதிகம்! வேலை! வேலை! வேலை! என்று! காலை மாலை அறியா குடும்பங்கள் அதிகம்! ஆக்கிவைத்த சாப்பாடு சூடாக்கித்தான் உண்ணவேண்டும் பரிமாறத் தாயிலை! வயிற்றுப் பசி ஆறினாலும் அன்புபசி எப்போது ஆறுவது? வேலை முடிந்து வந்தால் தூங்கும் பிளைக்கு முத்தம்! தாயின் வேதனை யாருக்குத் தெரியும்? பிள்ளைக்கே தெரியாதபோது! சோறு குறைந்திருந்தால் தான் பிள்ளை சாப்பிட்டதாய் அர்த்தம்! ஒருவேளை அது கொட்டியிருந்தால்? குப்பைத்தொட்டியைத் பார்க்கும் தாய்! பிள்ளைகளே.. பெற்றோரைப் புரிந்து கொள்ளுங்கள்! பெற்றோரே... பிழைகளை புரிந்து கொள்ளுங்கள்! இந்த... இயந்திரவாழ்க்கை எப்போது முடியுமோ!? எம் சுதந்திரதேசம் எப்போது விடியுமோ! செலவுகள் அதிகம் அதிகம் சேமிப்பும்! சிக்கனமும்! தமிழில் மறைந்துபோன வார்த்தைகள்! நாட்குறிப்பு போலே இரவில் மட்டும் ஞாபகம் வரும் இலட்சியங்கள்! விசா இல்லை .வேலை இல்லை! விசா இருப்பவனுக்கே வேலையில்லை! வெளிநாட்டு வாழ்க்கை பலருக்கு பிடிக்கவுமில்லை! என்ன செய்வய்த்து? வந்த செலவை வட்டியோடு கொடுக்கும்வரை! பசி, தூக்கம், பனி ,குளிர் இவைகளோடு போராட்டம்தான்! இவை அனைத்தும் எம்மை விட்டு விலகும் காலம் தான் தீபாவளி copy

Comments