முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவா பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார்
நாட்டின் 70வது குடியரசு தினம் இந்தியா முழுவதும் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் வழங்கிய உரையில் “குடியரசு தினம் இந்தியக் குடிமக்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை நினைவுகூர்வதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. நாம் நாட்டின் விடுதலைக்காக உயர்நீத்தவர்களை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்க வேண்டும். காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நாம் போற்ற வேண்டும்.” என்றார்.இதனைத் தொடர்ந்து மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment