
சீமான் எனும் பேராண்மை :
எது தனக்கு சாதகம் , ஆதாயம் தரும்னு பாத்து பேசாம , எது சரியோ அதை துனிந்து பேசும் ஓர் பேராண்மைக்கு சொந்தக்காரன் சீமான் .
திமுக , அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பட்டித்தொட்டியெங்கும் கிளை பரப்பி பல இலட்சகணக்கான இளைஞர்களை தனது ரசிகனாக கொண்டிருக்கும் ஒரு முன்னணி நடிகனை நேரடியாக எந்த ஓர் அரசியல் கட்சியும் எதிர்க்காது ,
காரணம் ஓட்டு எனும் ஒற்றை காரணம் , விஜய் கட்சி தொடங்கி நேரடி அரசியலுக்கு வராதவரை எந்த ஒரு கட்சியோ , கட்சி தலைமையோ விஜயை சீண்டாது ,
ஆனால் , அது எதைப்பற்றியும் துளியும் கவலைப்படாது அண்ணன் சீமான் பேசுவதுதான் வரவேற்க தக்கது
தான் தரையில் கத்தி கத்தி நாடிநரம்புவெடிக்க இந்த இனம் எழ பேசுபவனின் பேச்சை , உழைப்பை உடல் நோகாமல் தன் திரைபடங்களில் பயன்படுத்திக்கொண்டு குறைந்தபட்ச நன்றி உணர்வுக்கூட இல்லாத ஒரு நடிகனின் ரசிக குஞ்சுகள்அலறுவதில் ஆச்சர்யமொன்றும் இல்லை ....
அதுதமிழினத்தின் அரை நூற்றாண்டு கால சாபம் .
ஆம் அண்ணன் சீமானுக்கு ஓர் வேண்டுகோள் , இந்த இனம் பினமாகமல் இருக்க நீங்கள் ஆயிரம் பொதுக்கூட்டத்தில் பேசி உங்கள் ஆற்றலை இழப்பதை விட
உங்கள் கருத்துகளை யாரோ பேசி நடித்து ,சம்பாதித்து , உங்கள் உழைப்பை உறிஞ்சு உங்களுக்கெதிராகவே அறுவடை செய்யதுடிக்கும் நன்றிகெட்ட மாந்தர்களுக்கு மத்தியில்
உங்கள் சிந்தனைகளை , கருத்தியலை ஒரு பத்து படத்தில் சொன்னால் இதே விசிலடிச்சான் குஞ்சுகள் உங்களை தலைமேல் வைத்து ஆடும்.
இதைத்தான் இந்த இனம் விரும்புகிறதென்றால் நீங்களும் அதையே செய்துவிடுங்கள் அண்ணா ....
நாளை இந்த நடிகனின் படத்திற்கு ஒரு அரசியல் கட்சி அரசியல் காரணத்திற்காக எதிர்க்கும்போது ,முதல் ஆளாய் இதே சீமான் தான் பேசுவார் , அதையும் நாம் பார்க்கத்தானே போகிறோம் .
Comments
Post a Comment