தமிழர் கலாசார விழா விராலிமலை ஜல்லிக்கட்டில்(Tamil Nadu bull taming 'Jallikattu' event enters world record) புதிய உலக சாதனை




ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்ததாகவும், இன்று விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று இறுதிவரை 1353 மாடுகள் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த போட்டியை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்
Comments
Post a Comment