விக்ரம் மகன் துருவ் நடித்த திரைப்படம் வர்மா கைவிடப்பட்டது
விக்ரம் மகன் துருவ் நடித்த திரைப்படம் வர்மா கைவிடப்பட்டது . இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் அறிமுக நாயகனாக நடித்த படம் வர்மா முற்றாக தயாரிப்பு நிறுவனத்தால் கைவிட பட்டுள்ளது . தெலுங்கில் வெளியாக இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற 'அர்ஜுன் ரெட்டி'-யின் தமிழ் ரீமேக்கில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வந்தார். உச்ச நடிகராக விக்ரம் இருந்து வரும் நிலையில், அவரது மகனின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார்.வெற்றி படமான அர்ஜுன் ரெட்டியின் மறு ஆக்கமாக வர்மா தயாரிக்கப்பட்டது ஆனால் தெலுங்கு அளவுக்கு தமிழில் பாலா இயக்கத்தில் விறுவிறுப்பு இல்லாத காரணத்தால் கைவிட படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்து உள்ளது .


Comments
Post a Comment