சிங்கள இன வெறியர்களால் எமது பொக்கிஷம் எரிக்கப்பட்ட நாள் 31.05.1981- 01.06.1981
Burning memories...
1st June marks the 39th anniversary of the Jaffna Public Library being burnt down with more than 95,000 precious books by the Sri Lankan Government forces under the direct supervision of two UNP cabinet ministers.
சிங்கள இன வெறியர்களால் எமது பொக்கிஷம் எரிக்கப்பட்ட நாள் 31.05.1981- 01.06.1981யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31- யூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள இன வெறியர்களால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment