மிதிவெடி பிறந்த கதை

#மிதிவெடி பிறந்த கதை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்  ஒரு சிறந்த போரியல் வல்லுனர் என்பது அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு உணவுப் பிரியர் என்பதும் சிறந்த சமையல் கலைஞர் என்பது யாரும் அறியாத உண்மை

1992ம் ஆண்டு காலப்பகுதியில் ஒருமுறை வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்த அம்மான் தலைவரை சந்திக்கின்ற போது களமுனையயில் இருக்கும் போராளிகளுக்கு உணவு வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் சோற்றுப் பார்சல்கள் தயாரிப்பது அதை உரிய நேரத்தில் களமுனைக்கு கொன்டு சென்று சேர்ப்பதில் உள்ள் சிரமம் அதனால் உணவு விரைவாக பழுதடைவதாகவும் அவ் உணவை போராளிகளால் சாப்பிட முடிவதில்லை அவர்களுக்கு வழங்கப்படும் உலருணவு அவர்களுக்கு தேவையான பேசாக்கு கிடைக்காமல் பிள்ளைகள் சோர்ந்துபோய் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நல்ல போசாக்கை தரக்கூடிய சண்டை நேரத்தில் இலகுவாக சாப்பிடக் கூடிய ஒரு சாப்பாடு இருந்தால் நல்லாயிருக்கும் என்று கூறினார்

அதை மனதில் வைத்து சிந்திதத்த தலைவர் ஒரு முட்டை, இறைச்சி, உருளைக் கிழங்கு  வெங்காயத்தாள் மசாலாப்பொடி மிளகாய்த் தூள் உப்பு சேர்த்து மாவில் தோய்த்து பாண்தூளில் புரட்டி எண்ணொய்யில் பொரித்தெடுத்தார் இது சுமார் 400 கிராம் நிறையுடைய றோளை விட பெரிதாக ஒன்றைச் செய்தார் றோள் உருண்டையாக இருக்கும் இது சப்பட்டையாக இருந்தது  அதை நிதிப் பொறுப்பாளர்  தமிளேந்தி ஐயாவிடம் சாப்பிட கொடுத்தார் சாப்பிட்ட தமிழேந்தி ஐயா இது என்ன சாப்பாடு என்று தலைவரிடம் கேட்டார் அதற்கு தலைவர் நீங்களே ஒரு பேரை வையுங்கோ என்று சொன்னார் தமிழேந்தி ஐயா இதைப் பார்த்தால் மிதிவெடி மாதிரி இருக்கு என்று சொன்னார் அதுவே அந்த உணவுக்கு பெயராகி விட்டது

மிதிவெடியை  பெருமளவில் தயாரித்து களமுனைப் போராளிகளுக்கு அனுப்புமாறு உணவுப் பொறுப்பாளர் அம்மானுக்கு கூறினார் தலைர் இந்த மிதிவெடி போராளிகள் மத்தியில் விருப்பத்திற்குரிய உணவாகிப் போனது  மிதிவெடி நீண்ட நேரம் பசியை பிடித்து வைத்திருந்ததோடு உண்பதற்கு இலகுவானதாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் மிகுந்த சுவையுள்ளதாகவும் நீண்ட நேரம் பழுதடையாது இருந்ததாலும் வினையோகத்திற்கு இலகுவானதாகவும் இருந்தது

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் இந்த உணவு மிதிவெடியை உண்மையான மிதிவெடி வைக்கும் பெட்டிகளில் இந்த மிதிவெடிகள் அடுக்கப்பட்டு களமுனைக்கு அனுப்பப்பட்டன எத்தனை மிதிவெடி வருகிது முன்னரங்கத்திற்கு எத்ததனை மிதிவெடி அனுப்ப என்ற வோக்கி தொடர்பாடலை கேட்ட சிங்கள இராணுவம் முன்னரங்க நிலைப் பக்கமே எட்டிப்பார்க அஞ்சி நடுங்கினர்

இந்த மிதிவெடியின் சுவையால் இவ் மிதிவெடி பாசறையை விட்டு மெல்ல மெல்ல ஈழத் தமிழர் மத்தியில் விருப்பத்துக்குரிய உணவாகிப் போனது இது பற்றி யாழ்ப்பாணம் வன்னியைத் தாண்டி வேறு எவருக்கும் தெரியாது யாழ்ப்பாபாணத்தில் இருந்து கொழும்பு செல்லும்போது கெக்கீராவ சிங்களவர்களின் தேனீர் கடையில் மிதிவெடி கேட்டு சிங்களவர்களை மிரளவைத்த சம்பவங்களும் நடந்ததுண்டு.

Copied from FB...

Comments