சவுந்தர்யாரஜினிகாந்த் மறுமணம் நீண்ட வரிசையில் நின்று பரிகார பூஜை.


கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம், மற்றும் மறுமண பரிகார பூஜைகள் செய்து வருகிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மிக விரைவில் மறுமணம் நடை பெற உள்ளது. முதல் திருமணம் என்ன காரணத்தாலோ பிரிவை உண்டாக்கிய நிலையில், இந்த திருமண வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும் என்று, சவுந்தர்யா பல்வேறு பிரார்த்தனைகளுக்காக கோயில்களுக்கு சென்று, பூஜை செய்து வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சுவாமி தரிசனம் செய்தார். பரிகார பூஜைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்து பரிகார பூஜைகளை செய்தார் .

Comments