CANADA கனடாவின் சில முக்கிய பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை


கனடாவின் சில முக்கிய பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என்பதுடன் பனிப்புயல் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பனிப்பொழிவு தீவிரம் அடைந்து காணப்படுவதாக சுற்றுச்சூழல் கனடா வின்ட்சர் மற்றும் பிராந்தியத்திற்கு ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி, குறித்த பகுதிகளில் திங்கட்கிழமை மாலை பனிப்பொழிவு 10 முதல் 15 செ.மீ. அளவிலான இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதன் அளவானது செவ்வாய்க்கிழமை காலை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வாகான சாரதிகள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments